புதிய சீரியலில் நடிக்கும் சோனா.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா?

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கவர்ச்சி நடிகைகளில் சோனாவும் ஒருவர். குசேலன் படத்தின் காமெடிகளோடு கலந்து போனவர் சினிமாவிற்கு நீண்ட இடைவெளி விட்டுவிட்டார்.

இந்நிலையில் சனிமாவிற்கு ரீ எண்ட்ரி ஆகிறார் சோனா இதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார்.

மேலும் சின்னத்திரையில் முதன்முதலாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் “அபி டெய்லர்” என்கிற சீராயலின் மூலம் அறிமுகமாகவிருக்கிறார்.

விஜய் அஜித்பைடங்களின் துணை பாத்திரமாக நடித்த சோனா இப்போது சீரியல் நடிகையாகவிருக்கிறார். இருந்தாலும் சினிமாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தி வருகிறாராம்.

கடந்த ஆண்டும் கூட 13 படங்களுக்கு நடிப்பதற்காக கேட்கப்பட்டாராம். ஐந்து படங்களை ஒப்புக்கொண்டு 8 படங்களை நிராகரித்ததாக தகவல்.

தமிழில் மட்டுமே கவர்ச்சி நடிகையாக பார்க்கப்படுவதாகவும் மலையாளப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லி ரோல்கள் கிடைப்பதாகவும் கூறுகிறார் அம்மணி.