தினேஷ் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படம் “அட்டக்கத்தி” இந்த படத்தில் அறிமுகமாகி அன்றைய இளைஞரகள் மத்தியில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நந்திதா ஸ்வேதா.
தொடர்ந்து நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து குமுதா என்கிற கதாப்பாத்திரத்தில்
“குமுதா ஹேப்பி” “குமுதா ஹேப்பி” என்று குதூகலம் செய்திருந்தார்.
புலி படத்தில் தளபதி விஜயுடன் சிறிதளவு நேரத்தில் தோன்றினாலும் பேசும்படியான பாத்திரத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது வாய்ப்புகளில் பிசியானாலும் ஆன்லைனில் எப்போதும ஆக்டிவாக இருப்பவர் நந்திதா.

சமீபத்தில் இவரது சமூக வலை பக்கத்தில் ஒரு நபர் ஆபாசமாக பேசியுள்ளார். குடும்ப நடிப்பை வெளிக்காட்டி கதையை தேர்விடும் நந்து கோபப்பட்டுவிட்டார்.
அந்த நபர் நந்திதாவின் மார்பளவினை கேட்டிருக்கிறார். அதற்கு நந்திதா தங்கள் உறவுகள் நட்பு வட்டாரங்களில் இருக்கும் பெண்களிடம் கேளுங்கள் இவ்வாறு என்று கூறியுள்ளார்.
செருப்படி பதிலென நெட்டிசன்களால் இப்போது இந்த ரிப்ளே கொண்டாடப்படுகிறது.