25 ஆண்டுகளை கடந்த அஜித் குமார் படம்.. விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்

கடந்த 1996ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் சிவசக்தி மூவி மேக்கர்ஸ் பாண்டியன் தயாரிப்பில் வெளியான படம் காதல்கோட்டை. அஜித் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் என்றும் கூறலாம். தமிழ் சினிமாவில் பார்க்காமல் காதல் எனும் புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்திய படம். அஜித் மற்றும் தேவயானிக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக இப்படம் அமைந்திருந்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிய உள்ளது. இதை கொண்டாடும் விதமாக காதல் கோட்டை படக்குழுவினருக்கு அப்படத்தின் தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியன் சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் இதில் அஜித் கலந்து கொள்வாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிகழ்ச்சி குறித்து படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர்பச்சான் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “காதல் கோட்டை” திரைப்படம் வெளியாகி நாளையுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எட்டாவது படம். படத்தை உருவாக்க எங்கள் குழு பணியாற்றிய நாட்களை பின்னோக்கி அசை போடுகின்றேன். மீண்டும் பழைய நண்பர்களுடன் பழைய நாட்களுக்கு சென்று உரையாடி கலந்து மகிழும் அந்நேரத்திற்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ajith-kadhal-kottai
ajith-kadhal-kottai

காதல் கோட்டை படத்திற்குப் பிறகு அப்படத்தின் தயாரிப்பாளரின் தயாரிப்பிலோ இயக்குனர் அகத்தியன் இயக்கத்திலோ அஜித் மீண்டும் நடிக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.