தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இதனைத் தொடர்ந்து தமிழில் 100% காதல் கொரிலா, நிசப்தம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஷாலினிக்கு தமிழில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.
இருப்பினும் இவருக்கு ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் ரன்வீர் சிங்குடன் ஜயீஸ்பாய் ஜோர்தார் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். மகாராஜா என்ற மற்றுமொரு ஹிந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.shalini pandeyshalini pandey

ஹிந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், அம்மணி தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவர் உடல் எடையைக் குறைத்தது ரசிகர்களுக்கு ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், மற்றொருபுறம் இதுவும் அழகாகத்தான் இருக்கிறது என மனசை தேற்றிக் கொண்டு உள்ளனர்.

அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷாலினி பாண்டே பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷான பட்டாபட்டி டவுசர் உடையில் ஒருபக்க சட்டையை கழட்டிவிட்டு எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோயுள்ளனர்.