விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவாங்கி தனது குரலால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது நகைச்சுவை மற்றும் குழந்தைத்தனமான குறும்புகளால் பிரபலமானார்.
சிவாங்கியும், புகழும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. இவர்கள் இருவரின் காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதைப்போல் அஸ்வினுடன் சேர்ந்து சிவாங்கி செய்யும் குறும்புத்தனம் ரசிகர்களை கவர்ந்தது. கடந்த ஆண்டின் மோஸ்ட் ட்ரெண்டிங் ஜோடி என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த புகழால் தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தில் தற்போது சிவாங்கி நடித்து வருகிறார். தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நன்னாரே பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை சிவாங்கி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் அடுத்து ஹீராயினாக ரெடி ஆகிட்டீங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.