வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

கொரோனாவின் 3வது அலை, எப்போது தொடங்குகிறது தெரியுமா.? எச்சரிக்கும் இந்திய சுகாதார அமைப்பு!

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள மருத்துவமனை முதல்வர்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்துகிறார் தமிழ்நாடு கல்வி இயக்குனர் நாராயண பாபு. மேலும் அனைத்து மருத்துவமனைகளும் எல்லா விதமான வசதிகளுடனும் தயார் நிலையில் இருக்கவேண்டுமென எச்சரிக்கிறார்.

நாடு முழுவதும் தற்போது இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது குறிப்பாக இந்த உருமாறிய டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் தற்போது பல மாவட்டங்களிலும் கட்டுக்குள் வந்துள்ளது.

குறிப்பாக இந்த மூன்றாம் அலை செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர் தொற்றுநோய் வல்லுநர்கள்.

இந்த கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதனால் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Children-Cinemapettai.jpg
Children-Cinemapettai.jpg

அனைத்து குழந்தைககள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும் எனவும், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகளும் தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சுழற்சி முறையில் பணி புரிவதற்காக மருத்துவர்களும் செவிலியர்களும் தயாராக இருக்க வேண்டும் எனவும், நான்கில் ஒரு பகுதி செவிலியர் அவசரகால உதவிக்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News