தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
காரணம் முன்னதாக இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா பாலிவுட்டிலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும், பாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள அலுவலகம் ஒன்றிற்கு குட்டை ட்ரவுசருடன் ராஷ்மிகா சென்றுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பொது இடத்திற்கு வரும்போது இப்படியா வருவீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பேண்ட் போட மறந்து விட்டு அப்படியே போய் விட்டீர்களா என கிண்டலடித்து கமெண்ட் செய்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வந்த ராஷ்மிகா தற்போது ஒரே நாளில் காமெடி பீசாக மாறிவிட்டார்.