இளம் நடிகை ஒருவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி அநியாயத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டாலும் யாருமே கண்டுகொள்ளாத சோகத்தில் சுற்றி வருகிறாராம்.
அம்மணிக்கு வெறும் 27 வயதுதான் ஆகிறது. ஆனால் ஆளைப் பார்த்தால் ஏதோ பல வருடம் சினிமாவில் பழம் தின்னு கொட்டை போட்டது போல எதைக் காட்டினால் எப்படி பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.
அதேபோல் யார் யாரிடம் எந்தெந்த மாதிரி பேசினால் தனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்பதிலும் உஷாராக இருக்கிறாராம். மலையாள வரவாக இருந்தாலும் அம்மணிக்கு தற்போது தெலுங்கு சினிமா நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழிலும் சமீபத்தில் டாப் நடிகர் படத்தில் நடித்தார். நடித்தார் என்று சொல்வதைவிட வந்து போனார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அதனைத் தொடர்ந்து ஒல்லி நடிகருக்கு ஐஸ் வைத்து அவரது பட வாய்ப்பை பெற்றார்.
அடுத்ததாக மேலும் சில தமிழ் நடிகர்களுக்கு வலை வீசி வருகிறாராம். அதற்காக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அநியாயத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை ரகசியமாகவும் அனுப்பி வருகிறாராம்.
இருந்தாலும் அப்புறம் பார்க்கலாம் என சொல்லிவிட்டு யாருமே கண்டு கொள்ளாததால் அந்த நடிகை மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.