வெள்ளைத் தோல் நடிகையுடன் ரகசிய உறவில் இருந்த கவுண்டமணி.. வீடு வாங்கிக் கொடுத்து வந்து போன கதை

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காமெடி நடிகராக ஜொலித்தவர் தான் கவுண்டமணி. நாடக நடிகராக இருந்து பின்னர் நகைச்சுவை நாயகனாக மாறி தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினார். ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி செந்தில் கூட்டணிக்கு அப்படி ஒரு வரவேற்பு உண்டு. மேலும் செந்தில் இல்லாத படங்களில்கூட கவுண்டமணி தன்னுடைய காமெடி திறமையின் மூலம் பல படங்களை தனி ஒரு ஆளாக தாங்கியுள்ளார்.

கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பத்திரிக்கையாளரும் பிரபல நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டமணிக்கு அந்த நடிகையின் மீது அப்படி ஒரு ஆசையாம். ஆரம்ப காலகட்டங்களில் நட்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் பின்னாளில் அந்த நடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்து தங்க வைத்து அடிக்கடி வந்து போகும் அளவுக்கு நெருக்கமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகையின் பெயரை சொன்னால் சங்கடப்படுவர் என நடிகையின் பெயரை கூறாமல் மறுத்துவிட்டார் பயில்வான்.

கவுண்டமணிக்கு வெள்ளை ஆப்பம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அப்படி என்றால் வெள்ளை தோல் உடைய நடிகைகளை மிகப்பிடிக்கும் எனவும் இலைமறை காயாக அந்த விஷயத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இவ்வளவு நாட்களாக ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த நடிகர்களின் கிசுகிசுக்களை பேசிய பயில்வான் ரங்கநாதன் இப்போது கவுண்டமணி பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை பேசியுள்ளது பலருக்கும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

goundamani-cinemapettai
goundamani-cinemapettai

Next Story

- Advertisement -