இப்போது வரும் நடிகர்கள் எல்லாம் 25, 30 வயதைத் தாண்டினாலே ரசிகர்கள் அவர்களை ரசிக்க மறுக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் போன்ற ஒருசிலர் நடிகர்களை மட்டுமே வயது கடந்தும் ரசித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோரை எந்த வயதிலும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக விஜய், அஜித், சூர்யா போன்றோர் உள்ளனர்.
ஆனால் மொத்த தமிழ் சினிமாவிலேயே 75 வயதில் ஹீரோவாக நடித்து அந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்தது ஒரே ஒருவர்தான். அவர் வேறு யாரும் இல்லை நம்ம “கவுண்டர்” கவுண்டமணி தான்.
வயது கடந்தும் தன்னுடைய நகைச்சுவை ஆற்றல் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன்பக்கம் வைத்திருந்த கவுண்டமணி தன்னுடைய 75 வயது 49 ஓ என்ற அரசியல் அதிரடியை மையமாக வைத்து உருவான கதையில் ஹீரோவாக நடித்தார்.
இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பட ரிலீஸின்போது இந்த படத்திற்கு கணிசமான எதிர்பார்ப்பு இருந்தது மறுக்க முடியாத ஒன்று. அதன் பிறகும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார் கவுண்டமணி.
தற்போது 82 வயதைத் தொட்டிருக்கும் கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்த படம் கூட விரைவில் தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். எந்தக் காட்சியின் மூலம் கவுண்டமணியின் ரசிகராக மாறினீர்கள் என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.
