தமிழில் அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை வழங்கி வரும் தனுஷ் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை தடம் பதித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
வெற்றிமாறனுடன் தனுஷ் கூட்டணி வைத்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடித்த படம் தான் பொல்லாதவன். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக குத்து ரம்யா நடித்திருந்தார்.
ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இரண்டு நடிகைகளுக்கு டெஸ்ட் ஷூட் நடத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் காஜல் அகர்வால் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட தனுஷூடன் இணைந்து இவர் நடத்திய டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நடிகை பூனம் பாஜ்வா தான். தனுஷூடன் இவர் இணைந்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனம் பாஜ்வா தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தற்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.