முதல் படத்திலேயே பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்த அந்த நடிகைக்கு ஆரம்பம் என்னவோ சற்று சறுக்கல் ஆகவே இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட நடிகை இரண்டாவது படத்தில் கவர்ச்சி இல்லாமல் நடித்து கொஞ்சம் நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
அதன்பின் வாய்ப்புகள் நிறைய வரவே அம்மணியும் கதையை நன்றாக தேர்ந்தெடுத்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார். புகழின் உச்சியில் இருக்கும் போதே பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நடிகையின் செயல் எல்லை மீறி சென்ற நிலையில், காதல் திருமணம் விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் வாய்ப்புகளை இழந்த நடிகை, கோலிவுட் கைவிட்டால் என்ன என்று, வடமாநிலம் பக்கம் தலை காட்டினார்.
அங்கே ஒருவருடன் காதல் வயப்பட்டு லிவிங்டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால் நடிகை எந்த நேரத்திலும் நம்மை கழட்டி விட்டு விடுவார் என்று பயந்து போன அந்த பிரபலம் நடிகையுடன் ரகசியமாக நடந்த திருமண புகைப்படங்களை வெளியே கசிய விட,கோபமடைந்த நடிகையோ அவரையும் கழற்றி விட்டு விட்டார்.
எத்தனை நாளைக்குத் தான் தனியாக இருப்பது என யோசித்த நடிகை தற்போது மீண்டும் ஒரு புது பாய் ஃபிரெண்டை தேடி வருகிறாராம். பிடிக்கும் வரை சந்தோஷமாக ஒன்றாக இருப்போம்,. பிடிக்கவில்லையா பிரிந்து விடுவோம் என்கிற கண்டிஷனையும் இவர் போட்டு வருவதால் புதுசாக வருபவர்கள் கொஞ்சம் யோசித்து வருகிறார்களாம்.