கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.
இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரசிகர்கள் இவரை செல்லமாக எக்ஸ்பிரஷன் குயின் என்று தான் அழைப்பார்கள். தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும் ராஷ்மிகாவிற்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம். படங்கள் மட்டும் அல்லாமல் சோசியல் மீடியாவில் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நடிகை காஜல் அகர்வாலை பின்னுக்குத் தள்ளி ராஸ்மிகா முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி நடிகை ராஷ்மிகா 19.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் ப்ரித் சிங், ஸ்ருதிஹாசன், ஆகியோர் உள்ளனர்.