செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

ரஜினி பட இயக்குனருடன் கைகோர்க்கும் அசோக் செல்வன்.. பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ்சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்திக்கும் ஒரு இளைஞன் அதை எப்படி கையாள்கிறான் என்பதை காமெடி கலந்த கதையாக அட்டக்கத்தி படத்தில் ரஞ்சித் காட்டியிருந்தார்.

இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என அடுத்தடுத்து சீரியஸான படங்களை மட்டுமே ரஞ்சித் இயக்கி இருந்தார்.

இப்படங்களில் ஆங்காங்கே சில இடங்களில் அழகான மெல்லிய காதல் காட்சிகளை வைத்திருந்தார். ஆனால் படம் முழுக்க இக்காட்சிகள் இடம்பெறவில்லை. அதேபோல் தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார்.

இப்படம் 50 வருடங்களுக்கு முன்பு வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை பற்றிய படமாகும். இப்படம் வருகிற 22ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தை இயக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளார்.

இப்படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என தலைப்பு வைத்துள்ளனர். இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருக்கும் எனவும், ஓ மை கடவுளே புகழ் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ranjith
ranjith
- Advertisement -spot_img

Trending News