இருளின் இயக்குனர் மிஷ்கின் எப்போதும் சஸ்பென்ஸ் திரில்லர் என விருவிருப்பாக திரைக்கதை அமைப்பதில் மிஷ்கினுக்கு நிகர் மிஷ்கினே. தமிழில் அஞ்சாதே, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய் என பல மிரட்டல் படங்களை தந்தவர் மிஷ்கின்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரின் ஆரம்ப கால வாழ்வு பற்றி பேசியிருந்தார். அவர் இயக்குனர் கதிருடன் இணைந்து பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்களை திறந்த மனதோடு கூறினார்.
காதலர் தினம், காதல் தேசம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கதிரிடம் பணியாற்றியபொழுது தான் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றும் தனக்கு உண்டான இடம் அதுவல்ல என்று தோன்றியதாகவும் கூறினார்.
பிறகு இயக்குனர் வின்சண்ட் செல்வாவிடம் துணை இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதிலும் முதல் படமே தளபதி விஜயுடன் யூத் படம் என்றும் குறிப்பிட்டார். அப்போது தளபதி விஜய் அவரிடம் பல நாட்களாக பார்த்து வருகிறேன் தீயா வேல பார்க்கறீங்க ஆனால் ஏன் என்னிடம் பேசுவதே இல்லை என்று கேட்டாராம்.
உடனே மிஷ்கின் நான் ஒரு புதிய துணை இயக்குனர் என்றும் பணியில் அதிக நேரம் கவனம் செலுத்துவதால் தங்களிடம் பேச முடியவில்லை எனறும் கூறிவிட்டு அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டாராம்.