சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய திரைப்படம் சந்திரமுகி. அது மட்டுமில்லாமல் பல திரையரங்குகளில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடியது.
ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, நாசர், நயன்தாரா, ஜோதிகா போன்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் முத்திரை பதிக்கும் அளவுக்கு அமைந்தன. தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆனால் ரஜினிகாந்துக்கு பதிலாக சந்திரமுகி 2 படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேய்க்கும் அவருக்கும் நல்ல கனெக்சன் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் இயக்குனர் பி வாசு.
இருந்தாலும் பிளாஷ்பேக் காட்சியில் வரும் வேட்டையன் ரஜினிகாந்த் தான் அனைவரது ஃபேவரைட். இதனால் பிளாஷ்பேக் காட்சி போன்ற ஒரு சில காட்சிகள் சந்திரமுகி 2 படத்தில் வைத்து ரஜினிகாந்த்தை பழைய வேட்டையின் கெட்டப்பில் வரவைத்தால் எப்படி இருக்கும்? என படக்குழுவினர் தீவிரமாக யோசித்து வருவதாக ஒரு வதந்தி உள்ளது.
அப்படி ஒரு சான்ஸ் கிடைத்தால் மீண்டும் ரஜினியை வேட்டையனாக பார்க்க ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் பி வாசு தரப்பில், சந்திரமுகி முதல் பாகத்தில் இடம்பெற்ற எந்த ஒரு நடிகரும் இரண்டாம் பாகத்தில் இருக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
அதுமட்டுமில்லாமல் இது ஒரு புதிய கதை எனவும் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதியில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி அடுத்த வருடத்தில் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம்.