8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா.. அதுவும் முன்னணி நடிகர் படத்தில்!

சமீபகாலமாக திருமணமான நடிகைகள் பலரும் தங்களுக்கு விருப்பமான மொழிப்படங்களில் ரீ-என்ட்ரி கொடுக்க தொடங்கி விட்டனர். அந்தவகையில் எட்டு வருடம் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் பத்மபிரியா.

சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பத்மபிரியா. அதனைத் தொடர்ந்து பட்டியல், சத்தம் போடாதே போன்ற படங்களில் நடித்த இளைஞர்களை பெருமளவில் கவர்ந்தார்.

அதன் பிறகு நடித்த மிருகம் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. அச்சு அசல் கிராமத்து பெண் போலவே நடித்திருந்தார். அதன்பிறகு சேரனுடன் பொக்கிஷம், ராகவா லாரன்ஸ் நடித்த இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்தார்.

இருந்தாலும் பெரிய அளவில் தமிழில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறிய பத்மபிரியா தன்னுடைய சொந்த மொழியான மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் சரியான கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருந்தாராம்.

இந்நிலையில் பத்மபிரியாவின் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு ஒரு கதாபாத்திரத்தை சொல்லி ஓகே செய்துள்ளார் விக்ரமின் கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் கோப்ரா படத்தில் பத்மபிரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். மேலும் தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தங்கமீன்கள் படத்திற்கு பிறகு பத்மப்ரியா கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

padmapriya-cinemapettai-01
padmapriya-cinemapettai-01