சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.
இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். முன்னதாக விஜய் டிவியில் இருந்து பிரிந்து சென்று ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விஜய் டிவி அளவுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த ரட்சிதா தற்போது மீண்டும் விஜய் டிவிக்கே வந்து தஞ்சமடைந்து விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரிய டிரன்ஸ்பரெண்ட் சாரியில் நறுக்குன்னு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை இம்சைப்படுத்தியுள்ளார்.
