தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும் நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்த போனிகபூர் வலிமை படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். மேலும் வலிமை படம் இண்டர்நேஷனல் லெவலில் இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விரைவில் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளது.
இது ஒருபுறமிருக்க மூன்றாவது முறையாக தல 61 படத்தில் போனிகபூர் அஜித் வினோத் கூட்டணி இணைகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சிறுத்தை சிவா போலவே அஜித்திற்கு வினோத்தின் வேலைப்பாடுகள் மிகவும் பிடித்து விட்டதால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதன் காரணமாகவே இந்த ஹாட்ரிக் கூட்டணி என்கிறது சினிமா வட்டாரம்.
வலிமை படத்தின் 10 நாள் படப்பிடிப்புகள் இன்னும் இழுத்துக் கொண்டே இருப்பது நினைத்து அஜீத்துக்கு கொஞ்சம் வருத்தமாம். அதுமட்டுமில்லாமல் வலிமை படம் இரண்டு வருடங்கள் இழுத்தடிக்கும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. இதனால் அடுத்த படத்தை உடனடியாக தொடங்கி வேகவேகமாக முடித்து அடுத்த சம்மருக்கு ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம் தல அஜித்.
