வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

110 கிலோ குண்டான அரவிந்த்சாமி.. எப்படி தெரியுமா.? 15 கிலோ குறைத்து ரீ-என்ட்ரி கொடுத்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன என்னதான் வெற்றி படங்களை ஒரு இயக்குனர் கொடுத்தாலும் தோல்வி படங்கள் கொடுப்பதிலும் கில்லாடிதான்.

அப்படி மணிரத்னம் இயக்கத்தில் ஒரு சில தோல்வி படங்களும் இடம் பிடித்துள்ளன. ஒருகாலத்தில் மணிரத்னத்திற்கு சினிமாவில் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்ததனால் மீண்டும் சில வருடங்கள் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார்.

தற்போது மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக மணிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். அரவிந்த்சாமிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தது மணிரத்தினம்.

arvind swamy
arvind swamy

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்குப் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

என்னதான் ஒரு மனிதனுக்கு வாழ்வில் வெற்றிகள் வந்தாலும் தோல்விகள் வருவது ஒன்றும் புதிதல்ல அப்படி அரவிந்த் சாமிக்கு ஒருகாலத்தில் தோல்விகள் மட்டுமே குவிந்தன. அதனால் சினிமாவை விட்டு விலகி பல வருடங்கள் தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் அரவிந்த்சாமிக்கு ஒரு விபத்து ஏற்பட சிகிச்சை பெற்று 110 கிலோவுக்கு மேல் உடல் எடையை வைத்திருந்தார். எப்படி தனது சினிமாவில் முதல் வாய்ப்பு மணிரத்தினம் கொடுத்தாரோ அதே போல சினிமாவில் ரீஎன்ட்ரீ அதற்கும் மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார்.

அதாவது கடல் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் உங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் அதனால் 15 கிலோ உடல் எடையை குறைத்து மீண்டும் கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதாவது அரவிந்த் சாமிக்கு ஆரம்பத்திலும், ரீ-என்ட்ரிலும் வாய்ப்பு கொடுத்தது மணிரத்தினம் தான். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News