வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஹீரோவா 11 படம் நடிச்சு என்ன பிரயோஜனம்.. வில்லனா ஒரே ஒரு படம், லைஃப் செட்டில்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அந்த இளம் நடிகர். அடிப்படையில் தெலுங்கு ஹீரோவான இவருக்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக சில படங்கள் வெற்றி பெற்றது.

அதுவும் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த திரில்லர் திரைப்படம் ஒன்று பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதனை தொடர்ந்து சூப்பர் சூப்பர் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வர ஆசைப்பட்டார் அந்த நடிகர்.

ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லையாம். இதுவரை கிட்டத்தட்ட 11 படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இவருக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விடுகின்றனர்.

இப்படி மாறி மாறி பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் செட்டில் ஆக முடியவில்லையே என்ற வருத்தம் நீண்ட காலமாக இவருக்கு இருந்ததாம். அதன் காரணமாக அவ்வப்போது முன்னணி நடிகருக்கு வில்லன் வேடங்கள் கிடைத்தாலும் நடித்து வந்தார்.

ஆனால் தற்போது தமிழில் முன்னணி நடிகருக்கு தோல்விப்படம் கொடுத்த இயக்குனர் தெலுங்கில் ஒரு படம் எடுக்க உள்ளார். மாஸ் மசாலா கமர்சியல் படமாக உருவாகும் அந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் இந்த 38 வயது நடிகர்.

ஹீரோவாக லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு வில்லனாக ஒரே படத்தில் 4 கோடியை தூக்கி கொடுத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.

- Advertisement -spot_img

Trending News