புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திருமண புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா குப்தா.. அதிர்ச்சியான ரசிகர்கள்.!

சீரியல்கள் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரே மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிசி நடிப்பில் உருவாகி வரும் ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிசிக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் நடிகர் ராதா ரவி, மளவிகா, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜி.எம்.பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் ஜிபின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்நிலையில், ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிசி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

richard-dharsha
richard-dharsha

Trending News