தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா திரைப்படம் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கில் உருவான நாரப்பா படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார். மேலும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தார். பிரியாமணியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்துள்ளது.
ஆனால் நாரப்பா படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் 20 வயதான அம்மு அபிராமிக்கு 60 வயதான வெங்கடேஷ் ஜோடியாக நடித்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவே நாரப்பா படத்தில் உள்ள சின்ன குறை என கூறுகின்றனர் ரசிகர்கள்.
ஆனால் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் வெங்கடேஷ் நடித்த நாரப்பா படத்தை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் 29 வயதான இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி தேவையில்லாமல் பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நாரப்பா படத்தைப் பார்த்ததாகவும், தமிழில் அசுரன் படத்தில் நடித்த தனுஷை விட நாரப்பா படத்தில் வெங்கடேஷ் சிறப்பாக நடித்துள்ளார் என கூறி தனுஷ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

ஏற்கனவே நாரப்பா படம் வெளியானதிலிருந்து தனுஷ் நடிப்பு சிறந்ததா? வெங்கடேஷ் நடிப்பு சிறந்ததா? என சமூக வலைதளங்களில் சண்டை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருக்கிறது ஸ்ரீரெட்டியின் பதிவு. இதற்கு கடும் கண்டனங்களை எழுந்து வருகின்றன.