சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஹீரோ யார் தெரியுமா? நாசமா போச்சு என்ற ரசிகர்கள்

சமீபகாலமாக பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஹிட் அடிக்கும் படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க பல நடிகர்கள் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.

கடந்த ஆறு வருடங்களாக ஒரு வெற்றி கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த சூர்யாவுக்கு சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் சூரரைப்போற்று படத்தை ரீமேக் செய்ய பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்தியை தவிர மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது சூரரைப் போற்று.

தற்போது ஹிந்தியில் சூரரைப்போற்று படத்தை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பெரும்பாலும் அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கான் ஆகிய இருவருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வந்தன.

கடைசியாக சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளாராம். இதை கேள்விப்பட்டதிலிருந்து சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்கில் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர் ஏற்கனவே தமிழிலிருந்து ரீமேக் செய்த காஞ்சனா படத்தை பார்த்திருக்கிறார்களல்லவா.

akshay-kumar-cinemapettai
akshay-kumar-cinemapettai