தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பொன்வண்ணன். ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் எழுத்தாளராக இருந்துள்ளார். பின்பு காலப்போக்கில் நடிப்பின் மேல் ஆர்வம் வர அதன் பிறகு ஒவ்வொரு படங்களில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்துள்ளார்.
இவரை சொல்லப்போனால் இவரை ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு போலீஸ் கதாபாத்திரம் முதல் வில்லன் கதாபாத்திரம் வரை அனைத்திலும் நடித்துள்ளார். அதுவும் இவரது நடிப்பில் உருவாகும் கதாபாத்திரமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
அதனாலேயே பல இயக்குனர்களும் பொன்வண்ணன் தங்களது படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வைத்து இருப்பார்கள். அயன் போன்ற படங்களில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். சமீபத்தில் கூட சுல்தான் படத்தில் ராஷ்மிகாவிற்கு அப்பாவாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.
![ponvannan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/poonvannan.jpg)
ஆனால் பொன்வண்ணன் நடிப்பை தாண்டி நடிகர் சங்கத்தில் ஒரு நல்ல மனிதராகவே இருந்துள்ளார். அதாவது நடிகர் சங்கத்தில் நியாயமான மனிதர்களில் பொன்வண்ணன்னும் ஒருவர். சினிமாவில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் பொன்வண்ணன் இடம் கூறுவார்கள். உச்சகட்டத்தில் இருக்கும் சினிமா பிரச்சனைகளை சுமூகமாக முடித்து வைப்பாராம்.
அதற்கு தகுந்தார் போல் பொன்வண்ணனும் நியாயமாக நடந்து கொள்வாராம் யார் மேல் தவறு என்பதை புரிந்து வெளிப்படையாக கூறி விடுவாராம் இப்படி நடிகர் சங்கத்தில் பொன்வண்ணன் நியாயமாக நடந்து கொண்டுள்ளார் என பலரும் கூறுகின்றனர். இதனை பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேசன் ஒரு பேட்டியில் தெரிவித்து பாராட்டியுள்ளார்.