விஜய் சேதுபதிக்கு தம்பியா நடிச்சு என்ன பிரயோஜனம்.. சார்பட்டா படம் தான் கைகொடுத்துள்ளது

கோலிவுட்டில் திரும்பிய பக்கமெல்லாம் சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு படம் சிறப்பாகவும் தரமாகவும் அமைந்து இயக்குனர் பா ரஞ்சித்துக்கு பெயரும் புகழும் குவிந்து வருகின்றன.

இந்த படத்தில் முக்கியமாக பார்க்கப்பட்டது படத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தான். எந்தவொரு கதாபாத்திரத்தையும் உதாசீனப்படுத்தி விட முடியாது.

அதுமட்டுமில்லாமல் ஆர்யாவின் சினிமா கேரியரில் இந்தப்படம் மிகப்பெரிய மைல்கல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த படத்தின் வெற்றியால் பாதாளத்தில் கிடந்த ஆர்யாவின் மார்க்கெட் மீண்டுள்ளது.

அது போக இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நிற்கும்படி அமைந்தன. அதிலும் குறிப்பாக பசுபதி, ஜான் விஜய், டான்சிங் ரோஸ் சபீர், வேம்புலி ஜான், கலையரசன் என ஒவ்வொருவருக்கும் சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்தன.

சார்பட்டா பரம்பரை படத்தில் கிடைத்த டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரம் மூலம் தான் இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள அனைவருக்கும் தெரிந்த நடிகராக மாறியுள்ளார் சபீர். ஆனால் அவர் இதற்கு முன்பு விஜய் சேதுபதிக்கு தம்பியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.

சபீர் பேட்ட படத்தில் நடித்த பிறகு தனக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பினாராம். ஆனால் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பது படம் வெளியான பிறகுதான் தெரிந்ததாம். அதேபோல் அடங்கமறு படத்திலும் கலெக்டர் மகனாக நடித்திருப்பார்.

சார்பட்டை படத்தில் நடித்த பிறகு ஆர்யாவுக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் நம்ம டான்சிங் ரோஸ் சபீர்.

dancing-rose-sabeer-from-sarpatta
dancing-rose-sabeer-from-sarpatta