ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்த நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முன்னர் இருந்த அளவுக்கு வரவேற்பு இல்லை.
அந்த நடிகையின் சிரிப்புக்காகவே சில்லரையே சிதறவிட்ட ரசிகர்கள் ஏராளம். அந்தளவுக்கு தன்னுடைய இளம் வயதில் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களையும் கவர்ந்து தொடர்ந்து அவர்களின் படவாய்ப்புகளை பெற்று வந்தார்.
அக்கட தேசம் முதல் இக்கட தேசம் வரை அனைத்து இடத்திலும் அந்த நடிகையின் பெயர் தான். ஹீரோயின் வேடம் இல்லை என்றாலும் இரண்டாவது கதாநாயகியாவது அந்த நடிகையை நடிக்க வைத்து விடுவார்கள்.
அதன் காரணமாகவோ என்னவோ ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நடிகையால் சினிமாவில் நிலைக்க முடியவில்லை. தன்னுடைய மார்க்கெட் இழந்ததை உணர்ந்த அந்த நடிகை மார்க்கெட் இல்லாத ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அந்த நடிகரும் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக பல படங்களில் முட்டி மோதி விட்டார். ஆனால் ரசிகர்களிடம் அவரது பாட்சா பலிக்கவில்லை. இந்த நடிகையை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் அவர் நடிகர் என்பதே பலருக்கும் தெரியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவருக்கு சமீபத்தில் ஒரு கேங்ஸ்டர் படத்தில் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது. அதன் பிறகு பெரிய அளவில் பேசப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் மண்ணைக் கவ்வியது. இதனால் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் துணை நடிகர் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நிலைமை.
தன்னுடைய கணவரின் நிலைமையை புரிந்துகொண்ட அந்த 39 வயது சிரிப்பு நடிகை, தற்போது தனக்கு தெரிந்த பழைய தயாரிப்பாளர்கள் பலருக்கும் தூதுவிட்டு கொண்டிருக்கிறாராம். பார்ட்டிக்கு செல்லும் இடங்களிலெல்லாம் அவர்களுடன் இஷ்டம் இல்லை என்றாலும் சிரித்துப் பேசி பட வாய்ப்பு கேட்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டாராம் அந்த நடிகை.