தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் மகன்களும் நடிகர்களாக படங்களில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வெற்றியும் கண்டுள்ளனர். சினிமாவைப் பொருத்தவரை கருணாஸ் சொல்லியது போல தான் யாருடைய மகன் எவருடைய மகன் என்பதை ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் அவர்களிடம் தனித் திறமை இருந்தால் மட்டுமே தான் அரசியல் ஏற்றுக்கொள்வார்கள் என அவர் ஒருமுறை கூறியுள்ளார்.
அப்படி பல படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரான ஏ எம் ரத்னம் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி தயாரிப்பாளராக இருந்தார் அவருடைய மகனான ரவி கிருஷ்ணா சினிமா துறையில் நுழைந்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் அறிமுக படத்திலேயே பெரிய வெற்றி பெற்ற ரவிகிருஷ்ணா அதன்பிறகு வெற்றி தக்க வைத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டார்.
அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியான சுக்கிரன் திரைப்படமும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. பொன்னியின் செல்வன், கேடி மற்றும் நேற்று இன்று நாளை ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை அதனால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது.
சினிமாவை பொறுத்தவரை வெற்றி தோல்வி சகஜம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அது நடிகராக இருந்தாலும் சரி ரசிகர்களாக இருந்தாலும் சரி ஆனால் குறிப்பிட்ட ரசிகர்கள் ஒரு சில நொடிகளில் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டால் அதனை பெருமையாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.