செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

ஆர்யா வீட்டுக்கு தேவதை வந்தாச்சு.. அம்மா ஆன சாயிஷா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம் நடிகை த்ரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் மன ரீதியாக ஒத்துப் போனதால் திருமணம் செய்து கொண்டனர்.

மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா காதல் எப்படி அமைந்ததோ அதே போல்தான் ஆர்யா மற்றும் சாயிஷாவின் காதல் கதையும் அமைந்தது. சாயிஷா வந்த நேரமோ என்னமோ தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ஆர்யா இப்பொழுது தொடர் வெற்றி படங்களை கொடுத்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

அதுவும் திருமணத்திற்குப் பிறகு வெளியான மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை போன்ற அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. நேற்று இணைய தளம் முழுவதும் சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றிய பேச்சுகள்தான்.

பா ரஞ்சித் மற்றும் ஆர்யா கூட்டணியில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று ஆர்யாவின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது சார்பட்டா பரம்பரை.

ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினருக்கு நேற்று நள்ளிரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது நண்பரும் நலம் விரும்பியான நடிகர் விஷால் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

arya-sayyeshaa-cinemapettai
arya-sayyeshaa-cinemapettai

அந்த குழந்தையை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆர்யா மற்றும் சாயிசா இருவரும் திருமணம் செய்தபோது வயது வித்தியாசத்தை காரணம் காட்டி பலரும் அவர்களை கிண்டல் செய்தனர். ஆனால் அவர்களது ஒட்டுமொத்த விமர்சனங்களையும் அடித்து நொறுக்கி தற்போது நல்ல தம்பதிகளாக வலம் வருகின்றனர்.

- Advertisement -

Trending News