தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தனித்துவமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சூர்யாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சூர்யா படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொதுநலன் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு வருவார். எனவே சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அதுவும் ஒரே வருடத்தில் 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். சூர்யாவின் இந்த சாதனை பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் போஸ்டர் வெளியானது. மேலும் பல புதிய அப்டேட்டுகளும் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.
இந்நிலையில் சூர்யாவின் இந்த புதிய சாதனை ரசிகர்களுக்கு மேலும் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.