தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது ஜில்லுனு ஒரு காதல் படம் தான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் நடிப்பைத் தாண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முக்கியமான நபர் ஸ்ரேயா சர்மா. இவர் இப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் கதாபாத்திரத்தில் குட்டி ஐஸூவாக நடித்திருப்பார். இவரது துரு துரு நடிப்பு பலரும் ரசிக்கும்படி இருந்தது.
ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரேயா சர்மா தமிழில் ஜில்லுனு ஒரு காதல் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரேயா சர்மா கடந்த 2014ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான கயகுடு படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா சர்மா புதிய பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பட வாய்ப்பிற்காக அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களையும், டிக் டாக் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரவுசருடன் உட்கார்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.