தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சமுத்திரகனி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றன. சமுத்திரகனி பொறுத்தவரை படங்களில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்.
தற்போது சமுத்திரகனி ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் மேலும் தமிழில் அந்தகன், இந்தியன் 2 மற்றும் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதாலும் சமூகத்தின் மீதான ரசிகர்களின் ஆதரவு இருப்பதாலும் தொடர்ந்து பல இயக்குனர் சமுத்திரக்கனிக்கு தங்களது படங்களில் ஏதாவது ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கொடுத்து வருகின்றனர்.
தற்போது சமுத்திரகனி யாவரும் வல்லவரே எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார் மேலும் இப்படம் அறிமுக இயக்குனரான என் ஏ ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கிவருகிறார். இப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேல் பரிசுபெற்ற ரித்திகா சினிமாவில் முட்டிமோதி நாலு வருடம் கழித்து முக்கியமான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
இப்படம் நான்கு வெவ்வேறு கதைகளை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாகவும். மேலும் இப்படத்தில் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியான காரணங்கள் இருக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.