புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விக்னேஷ், இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணம்னு சொல்லி கிட்ட வராத.. கட்டளையிட்ட நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா அடுத்ததாக இந்திய சினிமாவை கலக்க பெரிய திட்டம் ஒன்றை போட்டுள்ளார். இதன் காரணமாக தன்னுடைய காதலருக்கு சில கண்டிஷன் போட்டுள்ளாராம்.

ஒரு நடிகை இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியும் எப்படி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் என யோசித்தே பல நடிகைகளின் காலம் போய்விட்டது. ஆனால் தன்னுடைய விடாமுயற்சியால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

மொத்தமாக கமர்சியல் நாயகியாக மாறாமல் அவ்வப்போது கதையின் நாயகியாகவும் சில படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அதுவே தற்போது அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்து கொண்டிருக்கிறது

தற்போது தன்னுடைய நண்பர் அட்லீயின் உதவியால் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி பாலிவுட் சினிமாவில் தன்னுடைய இடத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம் நயன்தாரா.

இதனால் காதல், கல்யாணம் என சுற்றிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவனிடம், இன்னும் இரண்டு வருடங்களுக்கு கல்யாணம் என்ற பேச்சை எடுக்கக்கூடாது என ஆடர் போட்டு விட்டாராம். இதனால் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விக்னேஷ் சிவன் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாராம் நயன்தாரா.

சமீபத்தில் கூட நயன்தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விரைவில் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளலாம் என ஏகப்பட்ட பிளான் போட்டு வைத்திருந்தாராம் விக்னேஷ் சிவன்.

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai

Trending News