சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிகையின் அம்மாவால் நடுத்தெருவுக்கு வந்த அங்காடித்தெரு மகேஷ்.. 50 லட்சத்தின் மேல் வந்த ஆசை

சினிமாவில் நடிகர்களாக களமிறங்கும் பலருக்கும் முதல் படம் வெற்றிப்படமாக அமைவது அரிதுதான். ஆனால் மகேஷ் என்ற நடிகருக்கு ஆரம்பமே அட்டகாசமாய் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படம் அமைந்தது.

ஷங்கர் தயாரிப்பில் உருவாகியிருந்த அங்காடி தெரு படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் உள்ள மூலை முடுக்கு இந்து பொந்து எல்லா இடத்திலும் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் தான்.

அந்த படம் வெற்றி பெற்றவுடன் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இயக்குனர்களும் முன்னணி நடிகைகளும் மகேஸ் உடன் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்களாம். அந்த நேரத்தில்தான் பிரபல நடிகையின் அம்மா உள்ளே புகுந்துள்ளார்.

மகேஷ் விட வயது அதிகமான பார்ப்பதற்கு ஆண்டி போல இருந்த அவரது மகளுடன் நடிக்குமாறு மகேஷுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்து மகேஷின் இரண்டாவது படத்தில் அவரது மகளை நடிக்க வைத்தாராம்.

மகேஷை விட வயது மூத்த அந்த நடிகை, படத்தில் பார்ப்பதற்கு மகேஷின் தாயார் போல் இருந்ததால் அந்த படம் படுதோல்வியை சந்தித்து அவருடைய கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மகேஷும் ஒரு படம் பெரிய ஹிட்டானதும் ஐம்பது லட்சம் சம்பளம் என ஆசை ஆசையாய் வாங்கி அநியாயமாக தனக்கு கிடைக்கவிருந்த நல்ல சினிமா வாழ்க்கையை கெடுத்து கொண்டதாக வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்தில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு அங்காடித்தெரு மகேஷ் குமர் சில படங்களில் நடித்தாலும் இன்னமும் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறுகிறார். தனக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை இப்படி அழித்துக்கொண்டோமே என இப்போதும் தன் நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

angadi-theru-cinemapettai
angadi-theru-cinemapettai

Trending News