37 வயதான நடிகை ஒருவர் சமீபகாலமாக தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் ஹீரோயின் வேடமாக இருந்தால் மட்டும்தான் நடிப்பேன் எனவும், அக்கா அண்ணி போன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன் எனவும் கறார் காட்டி வருகிறாராம்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் அவர். நடிப்பின் நாயகன் மூன்று வேடங்களில் மிரட்டலாக நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் இயக்கிய அந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர்தான் அந்த நடிகை.
பார்ப்பதற்கு சமர்த்துப் பிள்ளையாக இருந்தாலும் கிளாமரில் கலந்துகட்டி அடித்தார். இதன் காரணமாக தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளில் இருந்தும் ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது.
ஆனால் சம்பாதிப்பதில் நாட்டம் கொண்ட அந்த நடிகை சரியான கதைகளை தேர்வு செய்யாமல் அடுத்த சில வருடங்களிலேயே சுத்தமாக மார்க்கெட்டை இழந்தார். இவ்வளவு ஏன், மார்க்கெட்டை இழந்த காமெடி நடிகர் ரீ என்ட்ரி கொடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சுத்தமாக தன்னுடைய மார்க்கெட்டை கெடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு அவருக்கு விலைமாது கதாபாத்திரத்தில் ஒரு படம் கிடைத்தது. அதிலும் தயங்காமல் நடித்தார். ஆனால் தற்போது அதே மாதிரியான படங்கள் மட்டுமே தொடர்ந்து வருவதால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
இதைக் கேள்விப்பட்ட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும், அதற்கு நீங்க ஐட்டம் படத்தில் நடித்திருக்கக்கூடாது என அட்வைஸ் செய்து வருகிறார்களாம். தற்போது அந்தப் பெயரை எப்படி மாற்றுவது என புலம்பிக் கொண்டிருக்கிறாராம் அந்த நடிகை.