தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தளபதி விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படமாகவும் விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு தங்களுடைய வெற்றி தாகத்தை தீர்த்துக் கொண்ட படமாகவும் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது துப்பாக்கி.
அதுவரை அஜித் மற்றும் சூர்யா போன்றவர்களுக்கு மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி படத்தை எடுத்தார். இந்த படத்தின் வசூலும் வரவேற்பும் வேற லெவலில் இருந்தது.
அதுமட்டுமில்லாமல் அதுவரை ஒரே மாதிரியான படங்கள் செய்து கொண்டிருந்த விஜய்யை வேறு மாதிரியான கதைக்களத்திற்கு கொண்டு சென்று அவருடைய சினிமா கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றார் ஏ ஆர் முருகதாஸ்.
மேலும் அந்த படத்தில் விஜய்க்கு மிகச்சரியான வில்லனாக அமைந்தார் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால். துப்பாக்கி படத்தில் வித்யுத் ஜம்வால் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் அவர் பேசும் இன்டர்வெல் இங்கிலீஷ் வசனத்தை இன்றும் அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்வார்கள் தளபதி ரசிகர்கள்.
அப்படிப்பட்ட மாஸ் வில்லனுக்கு குரல் கொடுத்தது தனுஷ் பட நடிகர் தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. உண்மைதான். தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் தனுசை விட அதிக பெயரும் புகழும் பெற்றவர் தான் நடிகர் அபினய்.
இவரை பல விளம்பரப் படங்களில் பார்த்திருக்கலாம். துள்ளுவதோ இளமை படத்தில் மற்ற நடிகர்களை காட்டிலும் இவர் அனைவரையும் கவர்ந்ததால் அடுத்ததாக இவருக்கு சோலோ ஹீரோவாக ஒரு பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இளமை ததும்ப ததும்ப உருவாகி இருந்த அந்த படம் அவருடைய கேரியரை அடியோடு அழித்துவிடும் என்பதை அப்போது அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
![abinay-actor](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/abinay-actor.jpg)