திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜீ சேனலில் வந்து சும்மா தலை காட்ட 1 கோடி பில்லு போட்ட நடிகை.. 17 வயதிலேயே செட்டிலாக ஆசையாம்!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகைகளை டிவி சேனல்கள் அவ்வப்போது ஏதாவது ரியாலிட்டி ஷோக்களுக்கு அழைத்து கலந்து கொள்ள வைப்பது வழக்கமான ஒன்றுதான். உலகத் தொலைக்காட்சிக்கே இதுதான் வரைமுறை. அதற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு ஒரு சம்பளம் பேசப்படும்.

அது அவர்களின் பிரபலத்தை பொருத்து சம்பளத்தின் விகிதம் மாறுபடும். அந்த வகையில் தெலுங்கில் பிரபலமான சேனலாக இருப்பது ஜீ தெலுங்கு. இதில் சீரியல்கள் மற்றும் படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எப்படி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறதோ அதேபோன்ற நேரத்தில்தான் அங்கேயும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிலையில் 17 வயதான இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி என்பவரை சுமார் ஒரு கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்து வைத்துள்ளதாம் ஜீ தெலுங்கு டிவி. அவருக்கு அங்கு என்ன வேலை என்று தானே கேட்கிறீர்கள்.

அதாவது ஜீ தெலுங்கு சேனல் கூப்பிடும் நேரத்திற்கெல்லாம் வந்து ஒரு சில சீரியல்களில் தலைகாட்டி விட்டு செல்ல வேண்டுமாம். அதேபோல் விழா நாட்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள வேண்டுமாம்.

மேலும் இதற்கான கால நேரம் எதுவும் குறிக்கப்படாது எனவும், எப்போது கூப்பிடுகிறோமோ அப்போது வந்து நடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய கண்டிஷன். இதற்கெல்லாம் ஓகே சொல்லி ஒரு கோடிக்கு அட்வான்ஸ் வாங்கி அக்கவுண்டில் போட்டு கிளம்பி விட்டாராம் கீர்த்தி ஷெட்டி.

சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பண்ணா படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர்தான் இந்த கீர்த்தி ஷெட்டி. ஒரே படத்தில் உச்சம் தொட்டார் என்று சொன்னால் மிகையாகாது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வரும் கீர்த்தி செட்டி எந்த வாய்ப்பையும் மிஸ் செய்யக்கூடாது என டிவி நிகழ்ச்சிக்கு ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இவருக்கு முன்னணி நடிகைகளைப் போல செட்டிலாக ஆசை எனவும் கூறுகின்றனர்.

krithi-shetty-cinemapettai
krithi-shetty-cinemapettai

Trending News