பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராதாரவி மற்றும் சரத்குமாரை வீழ்த்தி நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றார். சங்க தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடிகர் சங்க கட்டிடம் கட்டுவோம், தமிழக நடிகர்களையும், தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று பல வாக்குறுதிகளை அள்ளி எறிந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் தான் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல் மக்களை டீலில் விடுகிறார்கள் என நினைத்தால், நடிகர் விஷாலும் அதையேதான் செய்துள்ளார். வெற்றி பெற்ற உடனே தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டார்.
அப்படி என்ன செய்தார் என்று தானே கேட்கிறீர்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நடிகர் சங்க நடிகர் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மட்டுமே பரபரப்பாக நடந்தது. ஆனால், அதன் பின்னர் வேறு எதுவும் நடக்கவில்லை. மேலும் தமிழக நடிகர்களை ஊக்குவிப்பேன் என்ற அவரது தேர்தல் வாக்குறுதியையும் காப்பாற்ற தவறியுள்ளார் விஷால்.
தற்போது நடிகர் விஷால் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்திற்காக நடிகர்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
நடிகர் சங்க வாக்குறுதியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தருவோம் என்று சொல்லிவிட்டு, இப்படி ஹைதராபாத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை தருவோம் என்று சொல்வது எந்த விதத்தில் சரியானது என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.