தமிழ் சினிமாவில் நீண்ட வருடமாக கதாநாயகியாக வலம் வந்தாலும் இன்னமும் முன்னணி நாயகியாக உயர முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த். இப்போதும் அறிமுக நடிகர்களுடனே ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
பிரியா ஆனந்த் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதை மறுக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு புகைப்படம் வெளியீட்டின் போதும் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
மார்க்கெட் இல்லாத நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது வழக்கம்தான். ஆனால் பிரியா ஆனந்த் மட்டும் தற்போதைக்கு சினிமா தான் முக்கியம் என தொடர்ந்து சின்ன படங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா ஆனந்த் நடிகர் அதர்வாவுடன் மூன்று வருடம் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்ததாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சமீபகாலமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகளை பற்றி பல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி கொடுப்பதை வேலையாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் சமீபத்தில் வயது தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாத நடிகைகளைப் பற்றி ஒரு வீடியோவில் பேசியிருந்தார்.
இரும்புக்குதிரை என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ரகசிய உறவில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களது காதல் முற்ற பிரியா ஆனந்த், அதர்வாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் கேட்டாராம். ஆனால் அதற்கு அதர்வா, நண்பர்களாகவே இருந்து விடுவோம் என்று கூறி அந்த காதலுக்கு அதர்வா முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார் பயில்வான்.