புதன்கிழமை, ஜனவரி 1, 2025

தன்னுடைய கல்யாணத்தில் மட்டும் ஒரு உஷாரான சினேகன்.. நம்ம கவிஞர்னா சும்மாவா!

தமிழ் சினிமா துறையில் சிறந்த பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் பாடலாசிரியர் மற்றும் நடிகராகவும் சின்னத்திரை தொடர்களிலும் மேலும் அரசியலிலும் பிரபலமாக இருப்பவர் .இவர் 700 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதி 2500 பாடல்களை எழுதியும் இருக்கிறார். சினேகன் எப்பொழுதும் முற்போக்கு சிந்தனையுடனும் தமிழ் பற்றுடனும் இருப்பவர் .நல்ல இலக்கியவாதி . இவர் பேசுவதில் வல்லவர்.

தனது கருத்துக்களை அழுத்தமாகப் பதிய வைப்பார் .யார் எந்த கேள்வி கேட்டாலும் சிரித்த முகத்துடன் பதில் அளிப்பார். பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டார் . கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இப்பொழுது சினேகன் தான் காதலித்த கன்னிகா உடன் திருமணம் நடந்துள்ளது.

கமலஹாசன் அவர்கள் தாலி எடுத்து கொடுக்க சினேகன் மணமகள் கண்ணிற்கு தாலி கட்டினார் .இந்து முறைப்படி திருமணம் நடந்தது. சன் தொலைக்காட்சியில் கல்யாண வீடு என்ற தொடரில் நடித்தவர். சினேகனின் திருமணத்திலும் ஒரு சர்ச்சை கிளம்பி வைரலாக பரவி வருகிறது.

snehan kannika ravi
snehan kannika ravi

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்கு சென்ற போது அங்கு புரட்சியை ஏற்படுத்தும் விதமாக “டைனமிக் திருமணம்” என்று கூறி விதவைப்பெண்கள் மாலை எடுத்துக் கொடுக்க அதை மணமகன் மணமகளுக்கு அணிவித்தார்.தாலி கட்டாமல் அந்த திருமணம் நடந்தது.

பின்பு திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி மணமக்களை கட்டியணைத்து முத்தம் கொடுத்தனர். இந்நிகழ்வு பெரும் சர்ச்சையாக நேரத்தில் இருந்தது. தற்போது சினேகன் திருமணத்தில் இதை நினைவுகூர்ந்த நெட்டிசன்கள் தன்னுடைய திருமணத்தில் மட்டும்” டைனமிக் திருமணம்” என்ற முறையை ஏன் சினேகன் கடைப்பிடிக்கவில்லை? புரட்சிகள் எல்லாம் அப்பாவி மக்களிடம் மட்டும்தானா ?என்று பலவாறு கேள்விகளை எழுப்பி உள்ளது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Trending News