செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பிரபல நடிகரை டார்ச்சர் செய்யும் இடுப்பு நடிகை.. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!

நானே இப்பதான் சிவனேன்னு ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன், இந்த படம் வெற்றி பெறுமா, பெறாத எதுவுமே தெரியல. இத்தனை பிரச்சனைல உன்னோட பிரச்சனையை வேற தாங்க முடியல என பிரபல நடிகையிடம் புலம்பித் தள்ளியுள்ளார் 48 வயது நடிகர்.

வாரிசு நடிகராக அறிமுகமாகி சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் அந்த நடிகர். ஆரம்பத்தில் இருந்தே தந்தையின் கைக்குள் சிக்கிக்கொண்டதாலோ என்னமோ தற்போதுவரை நிலையான மார்க்கெட் இல்லாமல் தடுமாறி வருகிறார். நிலையான என்ன, சுத்தமாகவே மார்க்கெட் இல்லைதான்.

போதாக்குறைக்கு கட்டிய மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தொடர் தோல்விகளை கொடுத்து காணாமல் போய்விட்டார். ஒரு காலத்தில் உச்ச நடிகருக்கு அடுத்தது இவர்தான் என பேசப்பட்டவர்.

இப்போது ஒரு வெற்றிக்கு போராடிக் கொண்டிருப்பதே சோகம்தான். இருந்தாலும் விடா முயற்சியில் தற்போது வடக்கே சூப்பர் ஹிட் அடித்த படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதையும் அவரது தந்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் எவர்கிரீன் ஜோடி என ஆரம்பத்தில் பில்டப் செய்யப்பட்ட படத்திற்குள் நுழைந்தவர் தான் இடுப்பு நடிகை. இடுப்புக்கு ஃபேமஸான இவர் படத்தில் நுழைந்ததில் இருந்தே நடிகருடைய தோழி என்ற பெயரில் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறாராம்.

மேலும் அந்த நடிகரிடம், எனக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்குமே என சிரித்துக்கொண்டே கேட்கிறாராம். இதனால் சங்கடத்தில் நெளியும் அந்த நடிகர், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கிறாராம்.

Trending News