தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகும் சற்றும் மார்க்கெட் குறையாமல் பிஸியாக நடித்து வரும் ஒரே நடிகர் இவர்தான். முன்னணி நடிகர்களும் சமந்தாதான் வேண்டும் என விரும்பி நடித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆஸ்தான நடிகையான சமந்தா உள்ளார்.
நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார்.
அதோடு, சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றி இருந்தார்.

இந்நிலையில், தற்போது சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S’ என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் மாற்றியிருக்கிறார். அதேசமயம், சமந்தாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சமந்தா அக்கினேனி’ என்றுதான் தற்போதுவரை உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இவரை டிவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இன்னிலையில் சமந்தா தனது பெயரை மாற்றியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.