வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அமீர் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. பிரபல இயக்குனருடன் மோதல்.

தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரும் தற்போது படங்களில் நாயகனாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் அமீர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார்.

vz durai
vz durai

நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இப்டத்தின் படத்தொகுப்பை இயக்குனர் முடிக்க அதில் தயாரிப்பாளருக்கும், நடிகர் அமீருக்கும் திருப்தி இல்லையாம்.

அதனால் அமீர் வேறு ஒரு விதமாக படம் முழுவதையும் எடிட் செய்து காட்ட அது தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்துள்ளதாம். ஆனால் இது இயக்குனர் வி.இசட்.துரைக்கு பயங்கர கோபத்தைக் கிளப்பியுள்ளதாம். இதனால் படம் வெளியாவது சந்தேகத்தில் உள்ளது.

Trending News