வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தெலுங்கில் ரீமேக்காகும் தல படம்… அஜித் ரோலில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக்காகி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் தான் வேதாளம். அஜித் ரசிகர்களிடையே மாபெரும் ஹிட் அடித்த இப்படம் தற்போது தெலுங்கில் தயாராகி வருகிறது.

இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தமிழில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடித்திருப்பார்.

chiranjeevi-cinemapettai
chiranjeevi-cinemapettai

அந்த வகையில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக கீர்த்தி சுரேஷ் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்குபெறும் போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இப்படம் நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை மேஹர் ரமேஷ் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ளது. விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Trending News