புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அஜித்தின் ரீல் மகள்.. ஏகுறப்போகும் ஜீ தமிழ் டிஆர்பி

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவருக்கு 16 வயது தான் ஆகிறது. ஆனால் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும்.

அந்த அளவிற்கு இவரது போட்டோ ஷூட் வேற லெவலில் இருக்கும். இந்நிலையில் அனிகா ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜீ தமிழ் சேனலில் புதியதாக மிகப்பிரம்மாண்டமான முறையில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. வெளிநாட்டில் ஒரு பிரம்மாண்ட தீவில் இந்த நிகழ்ச்சி பல கடுமையான டாஸ்க்குகளோடு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் மிக பிரபலமான முன்னணி நடிகரான ஆக்சன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக அனிகா சுரேந்தர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை அனிகா சுரேந்தர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால், அவர் கலந்து கொள்ளும் முதல் ரியாலிட்டி ஷோ இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

anika-cinemapettai
anika-cinemapettai

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகா தற்போது நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு பலனும் கிடைத்து உள்ளது. அனிகாவிற்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு ஒன்றும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News