திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒத்த காலுடன், ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டலாக வெளிவந்த பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வருபவர் பிரபுதேவா. இருப்பினும் இவர் சமீபகாலமாக படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் பொன்மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் பொய்க்கால் குதிரை படத்தை இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எழுதி இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பிரபு தேவா கையில் ஒரு குழந்தையுடன் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருக்கிறார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

poikkal kuthirai
poikkal kuthirai

சமீபகாலமாக பிரபுதேவா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுதவிர சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை பிரபு தேவா இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Trending News