தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அந்த பிரபல நடிகர், இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் தனுஷை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.
இறக்குமதி வாகனத்துக்கு நுழைவு வரி விதிக்க தடைவிதித்தது கேரள உயர்நீதிமன்றம். கேரளா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் நுழைவு வரி வசூலிக்க மாநில அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதாக உத்தரவை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பல பிரபலங்களும் நுழைவு வரிவிலக்கை கேட்டு வருகின்றனர்.
அப்படி தனுஷ் தனது இறக்குமதிக்கு வரிவிலக்கு கேட்டு 2015ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். தற்போது இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது. தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனுஷ் ஏற்கனவே 50 சதவீத வரி விலக்கு கட்டி விட்டதாகவும் மீதி உள்ள வரிக்கும் தான் வரிவிலக்கு கேட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அடுக்கடுக்கான கேள்விகளை தனுஷின் வக்கீலிடம் வைத்தார். மனுவில் மனுதாரர் யார் என்பதையும், என்ன தொழில் செய்கிறார் என்பது பற்றிய விவரங்கள் குறிப்பிடவில்லை மேலும் இவருடைய ஆண்டு வருமானம் குறிப்பிடப்படவில்லை ஏன் இதையெல்லாம் மறைக்க வேண்டும் என நீதிபதி கேட்டார்.
அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்கள் பலரும் அரசாங்கத்தை ஏமாற்றாமல் வரி செலுத்தி வருகின்றனர். பால் ஊற்றும் வியாபாரி அவர் பாலுக்காக பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்திற்கு வாங்கும் பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி வரி கட்டி வருகிறார். ஆனால் அவர் வரிவிலக்கு கேட்பதில்லை.
சாதாரண மக்கள் செலுத்தும் வரையில் தானே சாலைகள் போடப்பட்டுள்ளது இதனைத்தான் மனுதாரர்களின் பயன்படுத்துகிறார்கள் அப்புறம் ஏன் வரி செலுத்தக் கூடாது எனக் கூறினார். பல கோடி ரூபாய் உள்ள சொகுசு கார்கள் வாங்கும் பிரபலங்கள் ஏன் வரிவிலக்கு மட்டும் கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
மேலும் தனுஷ் வாங்கிய காருக்கு ரூபாய்.30,30,757 வரி செலுத்த வேண்டும். இத்தனை வருடங்களாக ஏன் வரி செலுத்தாமல் தனுஷ் காத்திருந்தார் அப்படி என்றால் வரி செலுத்தக் கூடாது என்று தானே என கேள்வி எழுப்பினார். மேலும் மனுதாரர் 48 மணி நேரத்தில் அந்த தொகையை செலுத்தி விட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.