வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்த ஒரே ஆசையால் சினிமாவிலிருந்து தூக்கி வீசப்பட்ட கவுண்டமணி.. இப்ப வரை எந்திக்க முடியவில்லை!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மிக பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அதிலும் குறிப்பாக இவர் பேசும் காமெடி வசனங்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார் மற்றும் சத்யராஜ் உட்பட அனைத்து நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்துள்ளார். அனைத்து நடிகர்களும் தங்களது படத்தில் காமெடியனாக கவுண்டமணி கண்டிப்பாக நடிக்க வேண்டும் என பலமுறை கூறியதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அளவிற்கு காமெடியில் உச்சத்தில் இருந்தார் கவுண்டமணி.

எல்லா நடிகர்களுக்கும் வருவது போல தான் கவுண்டமணிக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. அதனால் கிட்டத்தட்ட 5 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ராஜா எங்க ராஜா, ஒரு நல்லவன் ஒரு வல்லவன் உட்பட 5 படங்கள் நடித்துள்ளார், இதில் ஒரே ஒரு படம் மட்டுமே அவருக்கு வெற்றி கொடுத்துள்ளது.

சமீபத்திய சினிமாவில் காமெடி நடிகர்கள் பலருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிடுகிறது. அப்படி கவுண்டமணிக்கும் ஒரு காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும் அதற்காக இவர் முயற்சி செய்தாராம்.

அதுமட்டுமில்லாமல் இவர் கடைசியாக நடித்த 49-ஓ திரைப்படம் வயது முதிர்வு அப்படியே தெரிந்தது. அதனால் பல ரசிகர்களும் இவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இதில் ஒரு படம் மட்டும் தான் ஹீரோவாக கவுண்டமணிக்கு வெற்றி பெற்று கொடுத்தது.

அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் ஹீரோவாக நடிக்க ஆசை இருந்ததால் ஒரு சில வருடங்கள் அதற்கு முயற்சி செய்தார் எனவும் அப்போது காமெடியனாக நடிப்பதற்கு ஒரு சிலபட வாய்ப்புகள் வந்தும் அதனை தவிர்த்து விட்டார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் காமெடியனாக நடிப்பதற்கு பல இயக்குனர்களும் வாய்ப்புகள் தரவில்லை.

goundamani
goundamani

தற்போது சந்தானம் முக அமைப்பு சரியாக இருப்பதால் அவர் வருடத்திற்கு 3, 4 படங்கள் நடித்தாலும் அதில் ஒரு படம் தான் இவரைப்போல் வெற்றியும் பெறுகிறது. ஆனால் எப்படியும் வருடத்திற்கு ஒரு படம் வெற்றி கொடுத்து விடுகிறார். அதனால் தற்போது வரை ஹீரோ என்ற இமேஜ் சந்தானம் நடித்து காப்பாற்றி வருகிறார்.

Trending News