ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரே ஜாதியை மட்டமாக பேசிய மீராமிதுன்.. கொந்தளித்த சினிமா பிரபலங்கள், குவியும் வழக்கு

வழக்கமாகவே சர்ச்சைக்குறிய பதிவுகளாலும் சர்ச்சைக்குறிய பேட்டிகளாலும் எப்போதும் ஆன்லைனில் இருப்பவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா உட்பட சில அழகி போட்டிகளில் வென்றவர் தான் அம்மனி மீரா. அழகு இருக்கும் அதே இடத்தில் அகந்தை இருக்கும் அழகுடன் அழகிய திமிரும் பிடித்தவர் ஏன் அந்த திமிருக்கும் கூட இந்த அழகியை பிடித்திருக்கும் போல.

அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி நெக்ட்டிவ் டிரண்டிங்கில் பப்லிசிட்டி பெறும் மீரா தளபதி ரசிகர்களை ஒரு கை பதம் பார்த்தார். தளபதியின் தரப்பில் இருந்து அமைதிாக இருக்கும் படி ரசிகர்களுக்கு அழைப்பு வரவே பொங்கி எழுந்த ரசிகர்கள் பொறுமை காத்து ஒதுங்கினர். தளபதியை தொடர்ந்து சூர்யா என வேட்டையை தொடர்ந்தார் மீரா மிதுன்.

சிங்கம் குகைக்குள் இருந்து கைகாட்டவே வெகுண்டெழுந்த ரசிகர்கள் வெள்ளைக்கொடியோடு அமைதியானார்கள். இப்படியாக எப்போதும் ஊர்வாயில் வசிக்க நினைக்கும் மீரா மிதுன் சமீபத்தில் சில இயக்குனர்களை கைகாட்டி இவர்களின் படங்கள் தடுக்கப்படவேண்டும் என்றும் இவர்களை போன்றவர்கள் சினித்துறையில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும் என்றும் “சாதியை குறிப்பிட்டு” கூறினார்.

meera-mithun-cover
meera-mithun-cover

அந்த சமுதாயத்தை சார்ந்த அனைத்து இயக்குனர்களும் வெளியேற்றப்பட்டால் சினித்துறை பெருமளவு மதிக்கப்படும் என்றும் கூறினார். மீரா மிதுனின் இத்தகைய வெறியாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டன குரல்கள் வந்துகொண்டே உள்ளன.

என்னவானாலும் மீரா மிதுனின் பேரை உச்சரிக்க வைப்பதையே மார்க்கெட்டிங்காக நினைக்கிறார் போலும். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மீரா ஆர்மி என்கிற பெயரில் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க ஒரு தொகையை கொடுத்திருந்தார் என்றும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

இவர் நடத்த திட்டமிட்டிருந்த அழகிப்போட்டி ஒன்றில் ஊழல் நடப்பதாக கூறி அந்த அழகிப்போட்டியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அடுத்ததாய் சாதிய பிரிவினை தூண்டல் சாதிய உணர்வுகளை கெடுத்தல் உட்பட சில பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Trending News