வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தோனி ஹேர் ஸ்டைலுக்கு மாறிய விஜய பிரபாகரன்.. பட்டைய கிளப்பும் நியூ லுக், வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. விஜயகாந்த் படம் வெளியானால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகாது அந்த அளவிற்கு பல ரசிகர்களை வைத்து இருந்தார்.

சினிமாவை தாண்டி விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு தற்போது வரை கட்சியில் பணியாற்றி வருகிறார். மேலும் அவரது மகன் விஜய பிரபாகரனும் கட்சிக்காக பல இடங்களிலும் பேசி வருகிறார்.

சமீபத்தில் கூட மேடையில் கேப்டன் மாசா கெத்தா என பேசிய வசனம் சமூக வேளைகளில் மிகப் பெரிய அளவில் வைரலானது. தற்போது தொடர்ந்து பல இடங்களிலும் விஜய பிரபாகரன் தனது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

vijaya prabhakaran
vijaya prabhakaran

கூடிய விரைவில் தேமுதிக கட்சியில் இவர் பெரிய அளவில் கட்சிக்காக பாடுபடுவார் என கட்சியின் தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர் உட்பட பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் இவர் நடிப்பார் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் தோனி வித்தியாசமான ஸ்டைலில் தனது ஹேர் ஸ்டைலை வைத்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது தற்போது தோனியை போலவே விஜய் பிரபாகரனும் ஸ்டைலாக ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News